இந்தியா

குஜராத்தில் 69-ஆவது பிறந்தநாள் கொண்டாடிய பிரதமர் மோடியின் புகைப்படம் மற்றும் விடியோ

17th Sep 2019 10:28 AM

ADVERTISEMENT

 

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை 69-ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். அன்றைய தினம் காலை, நர்மதை மாவட்டத்தில் உள்ள கேவடியா என்னுமிடத்தில் சர்தார் சரோவர் அணையைப் பார்வையிட்டார். 

 

அதைத் தொடர்ந்து, நர்மதை அணை தனது முழு கொள்ளளவை எட்டியதைக் கொண்டாடும் விதமாக, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

ADVERTISEMENT

 

"நமாமி நர்மதா மஹோத்சவ்' என்ற பெயரில் நடைபெறும் அந்தக் கூட்டத்தில் சுமார் 10,000 பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

கேவடியாவில் நடைபெறும் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு அணைக்கரைப் பகுதிகள், ஒற்றுமையின் சிலை என்றழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேலின் சிலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மோடி ஆய்வு செய்யவுள்ளார். 

 

அதைத் தொடர்ந்து கருடேஸ்வர் கிராமத்தில் உள்ள தத்தாத்ரேயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை மதியம் சென்று அவர் வழிபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

புகைப்படங்கள் மற்றும் விடியோ நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT