ஹரியாணாவில் என்ஆர்சி பட்டியல் அமல்படுத்தப்படும்: முதல்வர் கட்டர்

ஹரியாணாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பட்டியல் கொண்டுவரப்படும் என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 
ஹரியாணாவில் என்ஆர்சி பட்டியல் அமல்படுத்தப்படும்: முதல்வர் கட்டர்

ஹரியாணாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) பட்டியல் கொண்டுவரப்படும் என்று மாநில முதல்வர் மனோகர் லால் கட்டர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். 

ஹரியாணாவில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஹெச்.எஸ். பால்லா, கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதி சுனில் லாம்பா ஆகியோரை அவர்களது இல்லத்துக்குச் சென்று முதல்வர் கட்டர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். 

அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 

பாஜகவின் "மஹா சம்பர்க் அபியான்' இயக்கத்தின் கீழ், முக்கியமான நபர்களை சந்தித்து வருகிறோம். அதன்படி, முன்னாள் நீதிபதி ஹெச்.எஸ். பால்லா, கடற்படை முன்னாள் தலைமைத் தளபதி சுனில் லாம்பா ஆகியோரை சந்தித்தேன்.  அப்போது நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் உள்பட, பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தோம். நீதிபதி ஹெச்.எஸ். பால்லா தனது ஓய்வுக்குப் பிறகும் பல்வேறு விவகாரங்களில் பங்களித்து வருகிறார். 
என்ஆர்சி பட்டியல் விவகாரத்திலும் பணியாற்றி வரும் அவர், விரைவில் அஸ்ஸாம் செல்கிறார். ஹரியாணாவிலும் என்ஆர்சி பட்டியல் கொண்டுவரப்படும். அதை அமல்படுத்தும்போது நீதிபதி ஹெச்.எஸ். பால்லாவின் ஆதரவும் தேவை என்று அவரிடம் கூறினேன். 
அதேபோல், ஹரியாணாவில் சட்ட ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக அரசு ஆய்வு செய்யும் என அவரிடம் தெரிவித்தேன் என்று மனோகர் லால் கட்டர் கூறினார். 
இந்திய குடிமக்களை அடையாளப்படுத்தும் வகையில் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 19 லட்சம் பேரின் பெயர் விடுபட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த மாநில பாஜக உள்பட பல்வேறு கட்சிகள் அதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com