வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

வெள்ளைக் காலர் அடிமைகள்: ஐ.டி. நிறுவனங்களை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கும் பொது நலன் மனு

DIN | Published: 11th September 2019 06:29 PM


தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர்களை அதிக நேரம் பணியாற்ற வைப்பது, விடுமுறை அளிப்பதில் கடும் கட்டுப்பாடு போன்றவற்றை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு முன்னணி நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறைகள் இருப்பதால், அதில் பணியாற்றும் ஊழியர்கள் கடும் பாதிப்புக்குள்ளாவதாகவும் அந்த பொது நலன் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் 3 பேர் மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பும் இணைந்து தெலங்கானா நீதிமன்றத்தில் இந்த பொது நலன் மனுவை தாக்கல் செய்துள்ளன. 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்னும் 4 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், மாநில அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : IT company telangana தெலங்கானா ஐ.டி. கம்பெனிகள்

More from the section

மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?
நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!
ஆயுட்காலம் முடிவடைகிறது: விக்ரம் லேண்டரின் நிலை என்ன?
தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை