வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

சாலை விபத்துக்களை தவிர்க்கவே கூடுதல் அபராதம் விதிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்

By Muthumari| IANS | Published: 11th September 2019 05:49 PM

 

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். 

மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, போக்குவரத்து விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கவும் இச்சட்டத்தில் வழிவகுக்கப்பட்டுள்ளது. 

சாலைப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இச்சட்டத்தில் பல்வேறு முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் நாடு முழுவதும் செப்டம்பர் 1-ஆம் தேதி அமலுக்கு வந்துள்ளது. 

இந்த நிலையில் இதுகுறித்து இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில்,  'சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல. மாறாக, சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்பதன் அடிப்படையிலே செயல்படுத்தப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில், அந்தந்த மாநிலங்கள் விரும்பும் பட்சத்தில் அபராதத் தொகையை குறைத்துக்கொள்ளலாம். இதுதொடர்பாக சட்டத்தில் திருத்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு மாநிலங்கள் குறைத்தால் அதனை மத்திய அரசு ஒருபோதும் எதிர்க்காது. சுமார் 30 ஆண்டுகளுக்கு பின்னர் போக்குவரத்து விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டு அபராதத் தொகைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார். 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : அமைச்சர் நிதின் கட்கரி சாலைப் பாதுகாப்பு Traffic rules Motor Vehicles Act Nitin Gadkari

More from the section

மின் சிகரெட் தடை! சாதா சிகரெட்டுக்கு மாற்று அல்ல; இது அதனினும் கொடிது! ஏன் தெரியுமா?
நடிகர் நாகார்ஜூனாவின் பண்ணை வீட்டில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு!
ஆயுட்காலம் முடிவடைகிறது: விக்ரம் லேண்டரின் நிலை என்ன?
தேஜஸ் விமானத்தில் பறந்த முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்!
மும்பைக்கு ரெட் அலர்ட்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை