இந்தியா

புதிய கல்விக் கொள்கை நவம்பர் 11ல் வெளியீடு?

10th Sep 2019 12:57 PM

ADVERTISEMENT

 

புதிய கல்விக் கொள்கையின் திருத்தப்பட்ட வரைவு அறிக்கைக்கு இம்மாத இறுதியில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளதாகவும், அந்த அறிக்கை நவம்பர் 11ல் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கை வெளியிடுவதற்காக முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 2017ல் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த ஜூன் 1ல் தேசிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை வெளியிட்டது. இதில் இந்தி கட்டாயம் என்ற மும்மொழி கொள்கைக்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அப்பகுதியை மட்டும் நீக்கி புதிய வரைவு கொள்கையை திருத்தி வெளியிட்டது.

வரைவு கொள்கை குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க ஆகஸ்ட் 15 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதில் 2 லட்சத்திற்கும் அதிகமான கருத்துகள் கிடைத்ததாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். இந்த கருத்துகளை ஆய்வு செய்ய 15 குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வரைவு அறிக்கையில் மாற்றம் மேற்கொள்வது குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியது.

ADVERTISEMENT

திருத்தப்பட்ட இறுதி வரைவு அறிக்கையை செப்டம்பர் 25ல் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஒப்புதல் அளித்தவுடன் புதிய கல்விக் கொள்கையை தேசிய கல்வி தினமான நவம்பர் 11ல் வெளியிட முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT