வியாழக்கிழமை 19 செப்டம்பர் 2019

மஹாராஷ்டிரத்தில் 90 நாய்கள் திடீர் மரணம்

ENS | Published: 10th September 2019 07:43 AM
கோப்புப் படம்

 

மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் 90 நாய்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அம்மாவட்டத்தில் அமைந்துள்ள கிர்தா-சவல்தப்ரா சாலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அங்கு வனத்துறை சோதனை நடத்தியது.

அப்போது சுமார் 90 நாய்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அப்பகுதி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்ததன் முடிவில், அவை பல நாட்கள் உணவின்றியும், அடித்து-துன்புறுத்தி கொலை செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.  

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : stray dogs stray dogs death Maharashtra Buldhana district

More from the section

விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது ஏன்?  இஸ்ரோ ஆய்வு 
திஹார் சிறை எண்.7ல் குவியும் காங்கிரஸ் தலைவர்கள்!
விக்ராந்த் விமான தாங்கிக் கப்பலில் முக்கியமான கணினிகள் மாயம்! தீவிர விசாரணை
விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ்.பதாரியாவை நியமனம் செய்ய மத்திய அரசு முடிவு 
ஐஎன்எக்ஸ் வழக்கு: சிதம்பரத்தை அக். 3 வரை சிறையில் அடைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு