இந்தியா

தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் பணிபுரிந்தால் நடவடிக்கை: கர்நாடக அமைச்சர் ஸ்ரீராமுலு எச்சரிக்கை

10th Sep 2019 01:15 AM

ADVERTISEMENT


தனியார் மருத்துவமனைகளில் அரசு மருத்துவர்கள் பணிபுரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
வால்மீகி சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி, அமைச்சர் ஸ்ரீராமுலு தலைமையில் அந்தச் சமூகத்தினர் பெங்களூரு குமாரகுருபாவில் உள்ள கிருஷ்ணா அரசினர் இல்லத்தில் முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை மனுவை திங்கள்கிழமை அளித்தனர். 
இதனைத் தொடர்ந்து,   ஸ்ரீராமுலு  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
கர்நாடக  மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தனியார் சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருவதாகப் புகார்கள் வந்துள்ளன. 
இதுபோன்று யார் பணியாற்றினாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிக் கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களால் ஏழை நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சில மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு விடுமுறை தேவை என்று கடிதம் கொடுத்துவிட்டு, தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றிவருவதாகவும் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. அதுபோன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநிலத்தில் உள்ள சில மருத்துவமனைகளை பட்டியலிட்டுள்ளேன். பட்டியலில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை முறைகளை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT