இந்தியா

ஜம்மு-காஷ்மீரின் சொத்து, கடன் பங்கீட்டுக்கு 3 பேர் குழு அமைப்பு

10th Sep 2019 04:59 AM

ADVERTISEMENT


இரு யூனியன் பிரதேசங்களாக செயல்படவிருக்கும் ஜம்மு-காஷ்மீரின் சொத்துகள் மற்றும் கடன்கள் பங்கீடு தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பாதுகாப்புத் துறை முன்னாள் செயலர் சஞ்சய் மித்ரா, குழுவின் தலைவராகவும்; ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல், ஓய்வுபெற்ற இந்திய குடிமை கணக்குகள் பணி அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்படுவர். ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம்-2019இன் 84 மற்றும் 85-ஆவது பிரிவுகளின்கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, அடுத்த மாதம் 31-ஆம் தேதி முதல் ஜம்மு-காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக செயல்பட உள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT