இந்தியா

"குடியரசுத் தலைவராவதற்கு என்ன செய்ய வேண்டும்?": மாணவரின் கேள்விக்கு மோடி என்ன சொன்னார் தெரியுமா?

7th Sep 2019 06:47 AM

ADVERTISEMENT


குடியரசுத் தலைவராவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று மாணவர் எழுப்பிய கேள்விக்கு, ஏன் பிரதமராகக் கூடாதா என்று மோடி பதிலளித்துள்ளார். 

சந்திரயான்-2 திட்டத்தின் லேண்டர் விக்ரமை இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து நிலவில் தரையிறக்கும் நிகழ்வை நேரில் பார்வையிட பல்வேறு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். லேண்டர் விக்ரமை நிலவில் தரையிறக்கும் நிகழ்வு தோல்வியடைந்ததையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து, அங்கிருந்து புறப்படுவதற்கு முன், இந்த நிகழ்வை நேரில் காண வந்திருந்த மாணவர்களிடம் உரையாற்றினார். 

அப்போது ஒரு மாணவர் பிரதமர் மோடியிடம், "இந்தியாவின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பது என் இலக்கு, அதற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "எதற்காக குடியரசுத் தலைவர்? ஏன்.. பிரதமராகக் கூடாதா?" என்று பதிலளித்தார்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT