இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளின் தைரியத்தைக் கண்டு வியந்தேன்: மும்பையில் பிரதமர் மோடி பேச்சு!

7th Sep 2019 04:49 PM | Muthumari

ADVERTISEMENT

 

முதல்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மும்பை மெட்ரோவை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடன் இருந்தார். 

பாரத் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் மும்பை மெட்ரோ ரயிலை உள்நாட்டு 
தயாரிப்பிலேயே 75 நாட்களில் உருவாக்கியுள்ளது.  இதனைத் திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மும்பை வந்தார். அவரை அம்மாநில ஆளுநர் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் வரவேற்றனர். மும்பை மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்து அதில் பயணித்தார். 

உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, 19 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 42 கி.மீ தூரத்திற்கு 3 மெட்ரோ ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். 

ADVERTISEMENT

மேலும், 32 அடுக்குமாடி தளத்துடன் கூடிய மெட்ரோ பவன் என்ற கட்டிடத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

அங்கு நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் உள்ள தைரியத்திலிருந்து குடிமக்களாகிய நீங்கள் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சந்திரயான் - 2 தரையிறங்குவதில் தடுமாற்றம் ஏற்பாட்டாலும், நிலவை அடையும் நமது திட்டம் விரைவில் நிறைவேறும். 

'பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் விஞ்ஞானிகளுடன் ஒரே ஒரு இரவு தங்கினேன். அவர்களின் தைரியத்தைக் கண்டு நான் மிகவும் வியந்தேன். நாம் முழு மன உறுதியுடன் குறிக்கோளை அடைய வேண்டும் என்றால் இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று பேசினார். 

Tags : மும்பை pm modi இஸ்ரோ ISRO Chandrayaan 2 மும்பை மெட்ரோ Mumbai Metro
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT