இந்தியா

இஸ்ரோவின் சாதனை இந்தியாவைப் பெருமையடைய வைத்துள்ளது: அமித்ஷா

7th Sep 2019 03:53 AM

ADVERTISEMENT


சந்திரயான் -2 வை நிலவின் மேற்பரப்புக்கு அருகே கொண்டு செல்வதற்கு இஸ்ரோ எடுத்த முயற்சிகள் ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய வைத்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டிவீட் செய்துள்ளார். 

ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் கடந்த 2-ஆம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதையடுத்து, இன்று லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் பணி நடைபெற்றது. இதில், மிகவும் சவாலானதாக கருதப்பட்ட அந்த 15 நிமிடப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இதில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை. அதேசமயம், 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் விக்ரம் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் வெளியானது. 

லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, இதுதொடர்பான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று முதற்கட்டத் தகவலை மட்டும் இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து டிவீட் செய்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 

ADVERTISEMENT

"சந்திரயான் -2 வை வெகு தொலைவுக்கு சென்றடைய வைத்த, இஸ்ரோவின் சாதனை ஒவ்வொரு இந்தியரையும் பெருமையடைய வைத்துள்ளது. இஸ்ரோவில் கடினமாக உழைக்கும் விஞ்ஞானிகளுடன் இந்தியா துணை நிற்கும்" என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT