இந்தியா

சந்திரயான் -2 திட்டம் 5 சதவீதம் மட்டுமே தோல்வியடைந்துள்ளது: இஸ்ரோ அதிகாரி தகவல்

7th Sep 2019 06:06 AM

ADVERTISEMENT


சந்திரயான் -2, 5 சதவீதம் மட்டுமே தோல்வியடைந்துள்ளதாக இஸ்ரோ அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

ஆர்பிட்டரிலிருந்து லேண்டர் விக்ரம் கடந்த 2-ஆம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதையடுத்து, இன்று லேண்டரை நிலவின் மேற்பரப்பில் தரையிறக்கும் பணி நடைபெற்றது. இதில், மிகவும் சவாலானதாக கருதப்பட்ட அந்த 15 நிமிடப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். 

இதில், நிலவில் இருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு வரை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் விக்ரம் சரியாக தரையிறங்கி வந்தது. ஆனால், அதன் பிறகு லேண்டர் விக்ரமிடமிருந்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைக்கவில்லை. அதேசமயம், 2.1 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பிறகு லேண்டர் விக்ரம் பாதை மாறியதாகவும் தெரிகிறது. அதன் வேகமும் கட்டுப்பாட்டை இழந்ததாக தகவல்கள் வெளியானது. 

லேண்டர் விக்ரமிடமிருந்து தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது, இதுதொடர்பான தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று முதற்கட்டத் தகவலை மட்டும் இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பெயர் தெரிவிக்க விரும்பாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் லேண்டர் விக்ரம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 

"லேண்டர் விக்ரம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்திருக்கக்கூடும். பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர், அதாவது சந்திரயான் -2 திட்டத்தின் 5 சதவீதம்தான் தோல்வியடைந்துள்ளது. மீதமுள்ள 95 சதவீத செயல்பாடுகள் தனது பணியைத் தொடரும். ஆர்பிட்டர் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு வருட காலத்தில், ஆர்பிட்டர் நிலவின் பல்வேறு புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்புவுள்ளது. அது லேண்டர் விக்ரமின் புகைப்படத்தையும் எடுக்கக்கூடும்" என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT