இந்தியா

வெள்ளிக்கிழமை தொழுகையை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் கட்டுப்பாடுகள்

7th Sep 2019 01:47 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீரில் வெள்ளிக்கிழமை தொழுகையையொட்டி  வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஒரு சில பகுதிகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. 
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு, அதனை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பின்னர் மெல்ல மெல்ல அமைதி திரும்பியதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், வெள்ளிக்
கிழமை தொழுகையையொட்டி வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.
பெரிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மக்கள் பெருமளவில் ஒன்றுகூடுகையில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக காஷ்மீரின் முக்கிய மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் 33-நாள்களை எட்டியது. இதுவரையில், பள்ளத்தாக்கு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியே காணப்படுகிறது. 
வணிக நிறுவனங்கள், சந்தைகள் மூடப்பட்டுள்ள போதிலும், சாலைகளில் பொது போக்குவரத்து இயக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT