இந்தியா

மும்பை காங்கிரஸ் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமனம்

7th Sep 2019 01:38 AM

ADVERTISEMENT


மும்பை காங்கிரஸ் தலைவராக ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே இப்பதவியில் இருந்து வந்த மிலிந்த் தியோரா, மக்களவைத் தேர்தலுக்கு பிறகு ராஜிநாமா செய்தார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதைத்தொடர்ந்து, மிலிந்த் தியோரா இந்த முடிவை மேற்கொண்டார். இந்நிலையில், அப்பதவிக்கு ஏக்நாத் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தற்போது மும்பை காங்கிரஸின் செயல் தலைவராக உள்ளார்.
இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மும்பை காங்கிரஸ் தலைவராக (பொறுப்பு) ஏக்நாத் கெய்க்வாட்டை நியமிக்க கட்சித் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்; மும்பை காங்கிரஸ் தலைவராக மிலிந்த் தியோரா ஆற்றிய பணிகளுக்கு கட்சி பாராட்டு தெரிவிக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 
ராகுலுக்கு நெருக்கமானவராக கருதப்படும் தியோராவுக்கு, கட்சியில் தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 228 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT