இந்தியா

போலி ஜாதி சான்றிதழ் வழக்கில் சிக்கிய சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி

7th Sep 2019 01:34 AM

ADVERTISEMENT


போலி ஜாதி சான்றிதழ் மூலம் சட்டப்  பேரவை தனித் தொகுதியில் போட்டியிட்ட வழக்கை எதிர்கொண்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது தலைமையிலான ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பரேஷ் பாக்பாரா கூறியதாவது:
வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தலைவர் அஜித் ஜோகி தில்லி சென்றுள்ளார்.
அங்கு அவருக்கு வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, குருகிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அவரது மனைவி ரேணு ஜோகி அவருடன் உள்ளார் என்று பரேஷ் பாக்பாரா தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலில் மர்வாஹி தனித் தொகுதியில் அமித் ஜோகியும், பாஜக வேட்பாளர் சமீரா பைக்ராவும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் அமித் ஜோகி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், போலியான ஜாதிச் சான்றிதழ் மூலம் அமித் ஜோகி தேர்தலில் போட்டியிட்டுள்ளதாக பைக்ரா வழக்குத் தொடுத்தார். அஜித் ஜோகியின் பழங்குடியினத்தவர் ஜாதிச் சான்றிதழை மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்நிலைக்குழு அண்மையில் ரத்து செய்தது. போலியாக அந்தச் சான்றிதழை பெற்றதாக அஜித் ஜோகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT