இந்தியா

பிடிஐ தலைவராக விஜய்குமார் சோப்ரா தேர்வு

7th Sep 2019 01:17 AM

ADVERTISEMENT


பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா (பிடிஐ) செய்தி நிறுவனத்தின் தலைவராக, பஞ்சாப் கேசரி பத்திரிகை குழுமத்தின் முதன்மை ஆசிரியரான விஜய்குமார் சோப்ரா வெள்ளிக்கிழமை ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். 
பென்னட் கோல்மேன் ஊடக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், டைம்ஸ் ஆஃப் இந்தியா பதிப்பாளருமான வினீத் ஜெயின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். விஜய்குமார் சோப்ரா, வினீத் ஜெயின், தி ஹிந்து  முன்னாள் முதன்மை ஆசிரியர் என்.ரவி, எம்.பி. வீரேந்திரகுமார் (மாத்ருபூமி), ஆர். லக்ஷ்மிபதி (தினமலர்), நீதிபதி ஆர்.சி. லஹோட்டி உள்ளிட்ட 15 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக உள்ளனர். 
தில்லியில் பிடிஐ நிறுவனத்தின் 71-ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகக் குழு கூட்டத்தின் முடிவில் தேர்தல் நடத்தப்பட்டது. தலைவர் மற்றும் துணைத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 
இந்திய பத்திரிகைகள் சொஸைட்டியின் தலைவராக பதவி வகித்துள்ள விஜய்குமார் சோப்ரா, ஏற்கெனவே பிடிஐ தலைவராக 2001-02, 2009-10 காலகட்டங்களில் பதவி வகித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT