இந்தியா

தென் கொரிய அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை

7th Sep 2019 01:43 AM

ADVERTISEMENT


பாதுகாப்புத் துறையில் இந்தியா, தென்கொரியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, தென்கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜியோங் கியோங்டூவுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுதொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
கிழக்கு ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு உறவை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு 5 நாள்கள் அரசு முறை பயணத்தை ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை தொடங்கினார். ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு தென்கொரியா சென்ற அவர், தலைநகர் சியோலில் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜியோங் கியோங்டூவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையின்போது, பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
குறிப்பாக, இரு நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படையில் கண்காணிப்பு மற்றும் ரோந்து கப்பல்களை பரஸ்பரம் அளித்து உதவுவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில், கடற்படையில் ஒத்துழைப்பு அளிப்பது, ராணுவத் தளவாட அறிவியல் குறித்த கல்வியை பரிமாறிக் கொள்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT