இந்தியா

கேரள ஆளுநராக ஆரீஃப் முகமது கான் பதவியேற்பு

7th Sep 2019 01:19 AM

ADVERTISEMENT


முன்னாள் மத்திய அமைச்சரான ஆரீஃப் முகமது கான் (68) கேரள மாநிலத்தின் ஆளுநராக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டார். 
கேரள ஆளுநராக, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் பதவிக் காலம் முடிந்த நிலையில், அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆரீஃப் முகமது கானை நியமித்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 1-ஆம் தேதி ஆணை வெளியிட்டார்.
இதையடுத்து, மாநிலத்தின் 22-ஆவது ஆளுநராக ஆரீஃப் முகமது கான் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். 
மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆரீஃப் கான், மலையாளத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டது விழாவில் கலந்துகொண்டவர்களிடையே சுவாரசியத்தை ஏற்படுத்தியது. 
இந்த விழாவில் மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், தாமஸ் ஐசக், இ.பி. ஜெயராஜன், மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆரீஃப் கானின் மனைவி ரேஷ்மா ஆரீஃபும் இந்த விழாவில் பங்கேற்றார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT