இந்தியா

இடதுசாரி தலைவர் கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் மேலும் மூன்று பேர் கைது

7th Sep 2019 01:16 AM

ADVERTISEMENT


மகாராஷ்டிரத்தில் இடதுசாரி தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்ஐடி) மேலும் மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவிந்த் பன்சாரே கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் சச்சின் ஆன்டுரே, அமித் பதி மற்றும் கணேஷ் மிஷ்கின் ஆகிய மூன்று பேரை சிறப்பு புலா
னய்வு குழுவினர் கைது செய்துள்ளனர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர்கள் புணே, மும்பையில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரையும் எஸ்ஐடி கைது செய்துள்ளது.
இதுவரையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளது.
ஆன்டுரே,  நரேந்திர தபோல்கர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர் ஆவார். அதேபோன்று, கர்நாடகாவில் கௌரி லங்கேஷை சுட்டுக் கொன்ற வழக்கில் பதி மற்றும் மிஸ்கின் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டுகள் உள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் கோவிந்த் பன்சாரே கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி மர்மநபர்களால் சுடப்பட்டார். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிப்ரவரி 20-இல் உயிரிழந்தார்.
இவரைப் போன்றே பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கரும் கடந்த 2013 ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இவர்களைப் போன்றே சமூக ஆர்வலரும், பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் பெங்களூரில் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு சமூக விரோதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த மூன்று பேரின் கொலை சம்பவங்களும் ஒரே விதமாக நடைபெற்றுள்ளதை வைத்து இதில் குறிப்பிட்ட ஒரு சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் பாதுகாப்பு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT