இந்தியா

அனைத்து துறைகளின் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்:  நிர்மலா சீதாராமன்

7th Sep 2019 01:36 AM

ADVERTISEMENT


பொருளாதார மந்த நிலையால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மத்திய அரசு தீர்த்துவைக்கும். இது தொடர்பாக அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் சனிக்கிழமை வரித் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்தார். அப்போது, நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தால், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

நாட்டில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை மத்திய அரசு தீவிரமாக கவனித்து வருகிறது. இப்பிரச்னைகளை அரசு தீர்த்துவைக்கும். இதற்காக முடிந்த அனைத்து உதவிகளையும் அரசு அளிக்கும். இது தொடர்பாக பல்வேறு துறையினரிடம் அரசுத் தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

வரி வசூல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், மத்திய நேரடி மற்றும் மறைமுக வரித் துறை ஆணையத்துக்கு வரி வசூல் தொடர்பாக இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. பல கட்ட ஆலோசனைக்கும், யோசனைக்கும் பிறகுதான் இந்த இலக்கு நிர்யணிக்கப்பட்டது. இலக்கைவிட வரி வசூல் குறைந்தால், அது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும். வரி வசூல் குறையும் என்ற காரணத்துக்காக சமூக வளர்ச்சித் திட்டங்களுக்காக அரசு ஒதுக்கீடு செய்யும் நிதி குறையாது.

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கியிடம் இருந்து கிடைக்கும் உபரி நிதியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இதுவரை முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை. வரித் துறை அதிகாரிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்றுதான் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கடமையைச் செய்யும் அதே நேரத்தில் தொழில்முனைவோருக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அதிகாரிகள் நடந்து கொள்ளக் கூடாது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT