இந்தியா

வேற்று சாதி இளைஞரைக் காதலித்த பெண்ணை தெருத் தெருவாக அடித்து இழுத்துச் சென்ற அவலம்

4th Sep 2019 12:28 PM

ADVERTISEMENT


போபால்: மத்தியப் பிரதேசத்தில் வேற்று சாதி இளைஞரைக் காதலித்து அவருடன் வீட்டை விட்டுச் சென்ற பெண்ணை, அவரது உறவினர்கள் தெருத் தெருவாக அடித்து இழுத்துச் சென்ற அவலம் நடந்தேறியுள்ளது.

அரைகுறை ஆடையுடன் இருக்கும் பெண்ணை, அவரது உறவினர்கள் கையில் பிரம்பை வைத்துக் கொண்டு அடித்தபடி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்புர் மாவட்டம் டெமாச்சி கிராமத்தில் இந்த அவலம் நடந்தேறியுள்ளது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும், அப்பெண்ணின் தந்தை மற்றம் கிராமத் தலைவர் தலைமறைவாக இருப்பதகாவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Temachi village inter-caste affair
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT