இந்தியா

இது வேற லெவல்: திருட வந்த வீட்டில் மக்ரோனி சமைத்து சாப்பிட்ட திருடர்கள்!

4th Sep 2019 11:20 AM

ADVERTISEMENT


வேலூர்: கொள்ளையர்கள் எல்லாம் தற்போது வேற லெவலில் பணியாற்றி வருகிறார்கள். தங்களது பணியிடங்களில் அவர்கள் மிகவும் சாவகாசமாக இருப்பதையே இது காட்டுகிறது.

வேலூரில் தென்னாம்பெட் என்ற பகுதியில் திருட வந்த இடத்தில் கொள்ளையர்கள் சிறிதும் பதற்றமே இல்லாமல், ஏதோ சுற்றுலா வந்தது போல தங்கியிருந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு பிறகு விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மற்றொரு திருடனின் கதை.. விழுப்புரத்தில் திருடச் சென்ற வீட்டில் ஊஞ்சலாடியவா் கைது

நேற்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் இரவு முழுவதும் வீட்டிலேயே இருந்துள்ளனர். வீட்டின் சமையலறையில் இருந்த மக்ரோனியை சமைத்து சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருந்த எல்இடி டிவி, மைக்ரோவேவ் ஓவன், தங்க நகைகள் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

ADVERTISEMENT

பக்காடி தெருவில் உள்ள மொஹம்மது பரூப் என்பவர் வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பரூக் தனது மனைவியுடன் பெங்களூரு சென்று அங்கு தனது மகன் வீட்டில் 3 நாட்கள் தங்கிவிட்டு நேற்று வீட்டுக்கு திரும்பிய போதுதான் தங்களது வீட்டில் கொள்ளைப் போனது தெரிய வந்தது.

இது குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், இந்த கொள்ளையர்கள் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருபவர்களா என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 

Tags : Burglars macaroni LED TV microwave oven valuables
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT