இந்தியா

விமான நிலையத்தில் உதவியாளரை கன்னத்தில் அறைந்த எதிர்க்கட்சித் தலைவர்

4th Sep 2019 01:37 PM

ADVERTISEMENT


மைசூரு: மைசூரு விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சித்தராமையா தனது உதவியாளரை கன்னத்தில் அறைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மைசூரு விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சித்தராமையா. அரசியல் தொடர்பான சில கேள்விகளுக்கு சித்தராமையா அப்போது பதில் அளித்தார். பிறகு செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு சென்ற சித்தராமையாவிடம், அவரது உதவியாளர் ஏதோ கூற, அதைக் கேட்ட சித்தராமையா கோபத்தில் தனது உதவியாளரின் கன்னத்தில் அறைந்துவிட்டார். பிறகு அவரை முன்னோக்கி தள்ளியவாறு சித்தராமையா அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

 

இந்த சம்பவம் அங்கே இருந்த அனைத்து செய்தியாளர்களின் கேமராவிலும் சிக்கியது. அனைத்து ஊடகங்களிலும் இது செய்தியானது. 

ADVERTISEMENT

நன்றி
புகைப்படம், விடியோ : ஏஎன்ஐ
 

Tags : கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா Siddaramaiah Congress leader
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT