இந்தியா

மும்பைக்கு ரெட் அலர்ட்: 24 மணிநேரமாக தொடர் கனமழை

4th Sep 2019 02:48 PM

ADVERTISEMENT

 

கடந்த 24 மணிநேரங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையின் தாணே உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை காலை 8:30 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8:30 மணி வரை 24 மணிநேரத்தில் மட்டும் 131.4 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

இதனால், சாலைகளில் வெள்ள நீர் தேங்கியது மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்கள் பாதுகாப்புடம் வீடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags : India Meteorological Department Red alert in Mumbai incessant rain
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT