இந்தியா

இந்தியப் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: வெங்கய்ய நாயுடு

4th Sep 2019 11:13 PM

ADVERTISEMENT


இந்தியப் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 

தில்லியில் இன்று நடைபெற்ற தேசிய மாநாடு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, 

"இந்தியப் பொருளாதார அடிப்படி வலிமையாக உள்ளது. நாம் ஒரு சில சீர்த்திருத்தங்களை மேற்கொண்டதால் அது நிலையாக உள்ளது. உலக அளவில் மந்த நிலை நிலவுவதால், இது தற்காலிகமானதுதான். அதனால், யாரும் வருத்தமடைய வேண்டாம். இந்தியா பொருளாதார வளர்ச்சியில் நகர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. வரும் நாட்களில் அதன் வேகம் அதிகரித்து, இலக்கை அடையும்" என்றார்.

இந்தியாவை வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடி பொருளாதார சக்தியாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Economical Survey 5 trillion US Dollar India economic goal Venkaih Naidu on economy Vice President on indian economy economic slowdown temporary இந்தியப் பொருளாதார மந்த நிலை வெங்கய்ய நாயுடு பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது 5 ட்ரில்லியன் அ
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT