இந்தியா

மூன் வாக் வைரலானதால் பெங்களூரு மாநகராட்சி செய்த வேலையைப் பாருங்கள்

4th Sep 2019 06:26 PM

ADVERTISEMENT

 

மூன் வாக் என்ற அடையாளத்தோடு, பெங்களூருவில் ஒரு மோசமான சாலையில் நடந்து செல்லும் விடியோ நேற்று வைரலானது.

சந்திரயான்-2 விண்கலம் தற்போது பரபரப்பான செய்தியான நிலையில், அதைக் கொண்டே மோசமான சாலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தவர்தான் கலைஞர் பாதல் நஞ்சுண்டஸ்வாமி.

விண்வெளி வீரர்களைப் போல ஆடையை அணிந்து கொண்டு கரடு முரடான சாலையில் பெங்களூருவைச் சேர்ந்த கலைஞர் பாதல் நஞ்சுண்டஸ்வாமி நடந்து சென்றார். இது நிலவில் ஒரு விண்வெளி வீரர் நடந்து செல்வது போலவே இருந்தது. இந்த விடியோ மூன் வாக் என்ற தலைப்புடன் நேற்று வைரலானது.

ADVERTISEMENT

இந்த விடியோ வைரலானதன் பலனாக, பெங்களூரு மாநகராட்சி உடனடியாக களத்தில் குதித்தது. ஆம், அதே நிலவில்தான். கரடுமுரடான சாலையில் உடனடியாக சாலையைச் செப்பனிட்டு சீரமைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

உடனடியாக பணியில் இறங்கிய ஊழியர்களுக்கு நஞ்சுண்டஸ்வாமி மறக்காமல் தனது நன்றியை பதிவு செய்துள்ளார்.
 

Tags : bangalore moon walk road issue road traffic பெங்களூரு மூன் வாக் நிலவில் பயணம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT