இந்தியா

பஞ்சாபில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : 22 பேர் பரிதாப பலி 

4th Sep 2019 10:17 PM

ADVERTISEMENT

 

குருதாஸ்பூர்: பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில்  22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது படாலா நகரம். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு புதன் மலை 4 மணியளவில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

விபத்து குறித்த தகவலறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். காயம்பட்டவர்கள் முதலுதவிக்குப் பிறகு அமிர்தசரஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

ADVERTISEMENT

சம்பவம் குறித்து அறிந்தவுடன் மாநில அமைச்சர்களை அங்கு சென்று நிவாரணப் பணிகளை  விரைவுபடுத்துமாறு, மாநில முதல்வர் அமரீந்தர் சிங் உத்தரவிட்டார். அத்துடன் காயமபட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்குமாறும் அவர் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேசமயம் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்ளுக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50000 மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25000 நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

Tags : firecracker factory blast punjab blast gurudaspur district patala factory blast death & injury பட்டாசு ஆலை வெடிவிபத்து பஞ்சாப் வெடிவிபத்து குருதாஸ்பூர் மாவட்டம் 22 பேர் பலி முதல்வர் அமரீந்தர் சிங்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT