இந்தியா

ஹரியாணா: ஐஎன்எல்டி கட்சியின் 4 எம்எல்ஏக்கள் ராஜிநாமா

4th Sep 2019 01:30 AM

ADVERTISEMENT


ஹரியாணாவில் இந்திய தேசிய லோக் தளம் (ஐஎன்எல்டி) கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள், தங்களது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தனர். பேரவைத் தலைவர் கன்வால் பாலை சந்தித்து, அவர்கள் ராஜிநாமா கடிதங்களை அளித்தனர்.
முன்னாள் துணை பிரதமர் தேவி லால் நிறுவிய ஐஎன்எல்டி கட்சி, அவரது மகனும், கட்சியின் தற்போதைய தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் குடும்பப் பிரச்னையால் கடந்த 2018-இல் இரண்டாக பிரிந்தது. அவரது பேரன் துஷ்யந்த் சௌதாலா, ஜனநாயக் ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 
இவரது கட்சியில், ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இணைந்து வருகின்றனர். துஷ்யந்த் சௌதாலாவின் தாயார் நைனா சௌதாலா உள்பட ஐஎன்எல்டி கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள், அண்மையில் ஜனநாயக் ஜனதா கட்சியில் இணைந்தனர். இதையடுத்து, நால்வரையும் கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் தகுதிநீக்கம் செய்யக் கோரி, பேரவைத் தலைவரிடம் ஓம் பிரகாஷ் சௌதாலாவின் இளைய மகனும், கட்சியின் முக்கிய தலைவருமான அபய் சிங் சௌதாலா புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது பதிலளிப்பதற்காக, 4 எம்எல்ஏக்களுக்கும் பேரவைத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். அதன்பேரில், அவரை செவ்வாய்க்கிழமை சந்தித்த 4 பேரும், தங்களது ராஜிநாமா கடிதங்களை சமர்ப்பித்தனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT