இந்தியா

நில ஆக்கிரமிப்பு புகார்: ஆஸம் கானுக்கு முலாயம் சிங் ஆதரவு

4th Sep 2019 01:16 AM

ADVERTISEMENT


நில ஆக்கிரமிப்பு புகார் விவகாரத்தில் சமாஜவாதி கட்சி மூத்த தலைவர் ஆஸம் கானுக்கு அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச முன்னாள் அமைச்சரும், சமாஜவாதி மூத்த தலைவருமான ஆஸம் கான் மீது நில ஆக்கிரமிப்பு புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரது முகமது அலி ஜவாஹர் பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயில், அரசு நிலத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், ஆஸம் கானுக்கு முலாயம் சிங் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் லக்னௌவில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆஸம் கானுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து சமாஜவாதி தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவர். தேவைப்பட்டால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் முறையிடுவேன் என்றார்.
ஆஸம் கான் கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் விரைவில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் வெற்றி பெறும் திட்டத்துடன் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு அடக்குமுறையில் ஈடுபட்டுள்ளது; எனது பல்கலைக்கழகத்தை அழிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு விரும்புகிறது என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT