இந்தியா

காஷ்மீரில் இனப்படுகொலை நடப்பதாக நிரூபிப்பது கடினம்: பாகிஸ்தான் மூத்த வழக்குரைஞர்

4th Sep 2019 02:31 AM

ADVERTISEMENT


காஷ்மீரில் இந்தியா இனப்படுகொலையில் ஈடுபடுவதாக நிரூபிப்பது மிகவும் கடினம்; ஏனெனில் அதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று பாகிஸ்தானுக்கான சர்வதேச நீதிமன்ற வழக்குரைஞர் கன்வர் குரேஷி கூறியுள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்த விவகாரத்தை வைத்து இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் நெருக்கடியை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது. ஆனால், இதற்கு எந்த நாடும் பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. 
இதையடுத்து, காஷ்மீரில் மனிதஉரிமை மீறல்களிலும், இனப்படுகொலையிலும் இந்தியா ஈடுபடுவதாக பாகிஸ்தான் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்தப் பிரச்னையை ஐ.நா. பொதுசபையில் பேச இருப்பதாகவும், இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தை அணுக இருப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குரேஷி இது தொடர்பாக கூறுகையில், காஷ்மீரில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவதற்கு நம்மிடம் எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லை. எனவே, சர்வதேச நீதிமன்றத்தில் அவ்வாறு வாதாடுவதும், நிரூபிப்பதும் மிகவும் கடினம் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT