இந்தியா

கர்நாடகத்தில் விரைவில் புதிய தொழில் கொள்கை அமல்: ஜெகதீஷ் ஷெட்டர்

4th Sep 2019 01:30 AM

ADVERTISEMENT

கர்நாடகத்தில் புதிய தொழில் கொள்கை விரைவில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தொழில் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் அவர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
 கர்நாடகத்தில் தொழில் துறையின் தலைநகரமாக பெங்களூரு விளங்குகிறது.  என்றாலும் மாநிலத்தின் மற்ற நகரங்களிலும் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது அவசியம். இதை கருத்தில் கொண்டு விரைவில் புதிய தொழில் கொள்கையை மாநிலத்தில் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
தொழில் கொள்கை திட்ட வரைவை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக கர்நாடக தொழில் வர்த்தகச் சபைக் கூட்டமைப்பு, சிறு தொழில் துறை சங்கம் உள்பட அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடமும்,  பொதுமக்களிடமும் ஆலோசனைக் கேட்கப்படும். 3 மாதங்களுக்குள் புதிய தொழில் கொள்கை திட்ட வரைவு இறுதி செய்யப்படும். சர்வதேச அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது.
15 நாள்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதாரப் பாதிப்பால், மாநிலத்தில் தொழில் துறையில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவேளை பாதிப்பு ஏற்படக்கூடும் என தெரியவந்தால், அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT