இந்தியா

உறவை பலப்படுத்துவதே இந்தியா-ரஷியாவின் முதன்மை விருப்பம் : பிரதமர்

4th Sep 2019 01:25 AM

ADVERTISEMENT


இந்தியாவும், ரஷியாவும் இருதரப்பிடையிலான உறவை பன்முகப்படுத்துவதும், வலுப்படுத்துவதுமே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாடு ரஷியாவின் விளாதிவோஸ்டாக் நகரில் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பின் பேரில் மோடி அந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.  ரஷியாவின் தூரக் கிழக்கு மண்டலத்துக்கு இந்தியப் பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை.  
ரஷியாவில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மோடி தனது பயணத்திற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
எனது அன்பு நண்பர் புதினுடன் இருதரப்பு உறவுகள் குறித்தும் அதேநேரம் மண்டல மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்தும் விவாதிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளேன். இந்தியா மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் தங்களது உறவை பன்முகப்படுத்துவதையும், வலுப்படுத்துவதையுமே முக்கிய நோக்கங்களாகக்  கொண்டுள்ளன. கிழக்கு பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்கேற்கவுள்ள இதர உலக நாடுகளின் தலைவர்களையும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகளையும் சந்தித்து உரையாடுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என்று அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT