இந்தியா

உ.பி.: முத்தலாக் கூறி விவாகரத்து செய்தவர் மீது வழக்கு

4th Sep 2019 01:18 AM

ADVERTISEMENT


உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்நகர் மாவட்டத்தில் உள்ள சுர்ஜு கிராமத்தில் உடனடியாக முத்தலாக் கூறி தனது மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
சுர்ஜு கிராமத்தைச் சேர்ந்த அஃப்தாப் என்பவரும், அவரது குடும்பத்தினரும் அஃப்தாபின் மனைவியிடம் வரதட்சிணை கேட்டு நீண்ட நாள்களாக தகராறு செய்துள்ளனர். அந்தப் பெண்ணின் குடும்பத்தினரால் அஃப்தாப் குடும்பத்தினர் கேட்ட வரதட்சிணையை அளிக்க இயலவில்லை. அதனால், அப்தாஃப், தனது மனைவியிடம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்தார். அதன் பின்னர், அந்தப் பெண்ணை அவரது இல்லத்துக்கு அனுப்பி விட்டார்.  இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், அஃப்தாப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினர்.
முஸ்லிம் சமூகத்தில் உடனடியாக மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை கிரிமினல் குற்றமாக்க வகைசெய்யும் முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமைப் பாதுகாப்பு) மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இதன்படி முத்தலாக் கூறி விவாகரத்து செய்யும் நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். இந்த சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து இந்த மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT