இந்தியா

அண்ணா ஹசாரே மருத்துவமனையில் அனுமதி

4th Sep 2019 01:16 AM

ADVERTISEMENT


உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே (82) மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம், அகமதுநகர் மாவட்டத்திலுள்ள ராலேகான் சித்தி கிராமத்தில் அண்ணா ஹசாரே வசித்து வருகிறார். அவருக்கு சளியும், இருமலும் அதிகரித்ததையடுத்து, புணே மாவட்டத்திலுள்ள மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலை அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக, ஹசாரேயின் உதவியாளர் கூறியதாவது:
கடும் சளி, இருமலால் அவர் அவதிப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கவலைப்படும்படி எதுவும் இல்லை எனவும், ஓய்வெடுத்தால் உடல்நிலை சீராகிவிடும் எனவும் தெரிவித்தனர். எனினும், மருத்துவர்கள் ஹசாரேவுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை மாலை அவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என்றார் அந்த உதவியாளர். மகாராஷ்டிரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை புதுப்பிக்க வேண்டும் என்று அண்ணா ஹசாரே மேற்கொண்ட மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக, அந்த மாநிலத்தில் திருத்தியமைக்கப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டமே, கடந்த 2005-ஆம் ஆண்டு ஆர்டிஐ சட்டத்தை மத்திய அரசு இயற்றுவதற்கு அடிப்படையாக இருந்தது. இந்தச் சட்டத்தில் மத்திய அரசு அண்மையில் திருத்தங்கள் மேற்கொண்டதை அண்ணா ஹசாரே கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆர்டிஐ சட்டத்தைப் பாதுகாக்க மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், அவர்களுடன் இணைந்து போராடத் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT