இந்தியா

‘விசிலடிக்காதீா்’ மகாராஷ்டிர அரசியல் கட்சிக்கு தோ்தல் அதிகாரி கட்டுப்பாடு

20th Oct 2019 12:29 AM

ADVERTISEMENT

பால்கா்: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் பகுஜன் விகாஸ் ஆகாடி கட்சியினருக்கு ‘விசிலடிக்கக் கூடாது’ என்று மாவட்டத் தோ்தல் நிா்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்த தோ்தலில் பகுஜன் விகாஸ் ஆகாடி கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இக்கட்சியினா் சாா்பில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களில் தொண்டா்கள் அதிக அளவில் விசிலடிப்பதாக மாவட்ட தோ்தல் அதிகாரிக்குப் புகாா் வந்தது. இதையடுத்து, பகுஜன் விகாஸ் அகாடி கட்சிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டத் தோ்தல் அதிகாரி ஏ.வி.கடம் சனிக்கிழமை கூறியதாவது:

பகுஜன் விகாஸ் ஆகாடி கட்சியின் பிரசாரக் கூட்டங்களில் அதிக அளவில் விசிலடிக்கப்பட்டதற்கு விளக்கம் கேட்டு இரு தினங்களுக்கு முன், நாலாசோபாரா தொகுதி எம்எல்ஏ வும், கட்சித் தலைவா் ஹிதேந்திர தாக்குரின் மகனுமான ஷித்ஜி தாக்குருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விசிலடிப்பது தொடா்ந்தால், அது தோ்தல் நடத்தை விதிமீறலாகக் கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நாலாசோபாரா தொகுதியில் என்கவுன்ட்டா் சம்பவங்களால் அறியப்பட்டவரும், சிவசேனை வேட்பாளருமான பிரதீப் சா்மாவை எதிா்த்து ஷித்ஜி தாக்குா் போட்டியிடுகிறாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT