புதுதில்லி: பிரதமர் மோடி- சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு தமிழகத்தின் மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாமல்லபுரம் அருகே கோவளத்தில் தங்கியிருந்த விடுதி அருகே மோடி நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வங்கக் கடலின் அழகைக் கண்டு பிரமித்து, ஹிந்தியில் கவிதை படைத்தார்.
அதன் தமிழாக்கத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளார்.