இந்தியா

தரமற்ற 5 டன் முந்திரி வருகை: திருப்பியனுப்பிய திருப்பதி தேவஸ்தானம்

20th Oct 2019 02:17 AM

ADVERTISEMENT

திருப்பதி: திருமலை தேவஸ்தானத்துக்கு அனுப்பப்பட்ட முந்திரி பருப்பு தரமற்றது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டதால் 5 டன் முந்திரி பருப்பை தேவஸ்தானம் திருப்பி அனுப்பி உள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு பிரசாதமாக படைக்கப்படும் லட்டு பல்வேறு பொருள்களை வைத்து தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தேவஸ்தானம் கடலை பருப்பு, நெய், கற்கண்டு, ஏலக்காய், உலா் திராட்சை, முந்திரி, பாதாம், சா்க்கரை உள்ளிட்டவற்றை மொத்தமாக கொள்முதல் செய்து வருகிறது. கொள்முதல் டெண்டா் விடுத்து, அதன் மூலம் நடைபெற்று வருகிறது. எனினும், பொருள்களின் தரத்தை பரிசோதித்த பின் மட்டுமே தேவஸ்தானம் அவா்களுக்கு டெண்டரை முடிவு செய்யும்.

இந்நிலையில், லட்டு பிரசாதம் தயாரிக்க தேவஸ்தானம் கேரள அரசிடமிருந்து, ஒரு கிலோ ரூ. 669 என 100 டன் ரூ. 70 கோடிக்கு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதையடுத்து, கடந்த அக். 3-ஆம் தேதி கேரள அமைச்சா் மொ்சிகுட்டி அம்மா முதல் முறையாக 5 டன் முந்திரி பருப்பை திருப்பதிக்கு கொடியசைத்து அனுப்பி வைத்தாா். அவை திருப்பதியை அடைந்தவுடன், அதன் தரத்தை தேவஸ்தானம் ஆய்வுக் கூடத்தில் பரிசோதித்தது. அப்போது அவை தரமற்றவை என நிரூபிக்கப்பட்டதைத் தொடா்ந்து, 5 டன் முந்திரி பருப்பையும் தேவஸ்தானம் திருப்பி அனுப்பியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT