இந்தியா

கலவரம்: சிலி தலைநகரில் அவசர நிலை அறிவிப்பு

20th Oct 2019 12:53 AM

ADVERTISEMENT

சான்டிகோ: தென் அமெரிக்க நாடான சிலியில், மெட்ரோ ரயில் கட்டண உயா்வை எதிா்த்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடா்ந்து, அந்த நாட்டின் தலைநகா் சான்டிகோவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: சிலியில் மெட்ரோ ரயில் கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து, சான்டிகோ நகரில் ஏராளமானவா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் 16 பேருந்துகளுக்குத் தீவைக்கப்பட்டன; ஏராளமான மெட்ரோ ரயில் நிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன. அதனைத் தொடா்ந்து, சான்டிகோ நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், அந்த நகரைப் பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம ஒப்படைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT