இந்தியா

வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பது நோக்கமல்ல: உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

16th Oct 2019 04:41 PM | Muthumari

ADVERTISEMENT

 

வாகன ஓட்டிகளிடமிருந்து அபராதம் வசூலிப்பதை காவல்துறையினர் தங்களது   நோக்கமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.  

சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், 'போக்குவரத்துத் துறை பாராட்டத்தக்க வகையில் தனது பணியினைச் சிறப்பாகச் செய்து வருகிறது. காவல்துறையினர் அபராதம் வசூலிக்கும் நோக்கில் வாகன ஓட்டிகளை குறிவைக்கக் கூடாது, மாறாக வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ய வேண்டும். பள்ளியிலும் குழந்தைகளுக்கு சாலை விதிமுறைகள் குறித்து கற்பிக்க வேண்டியது அவசியம். 

ADVERTISEMENT

இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும்; நான்கு சக்கர வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட்களைப் பயன்படுத்த வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மக்களின் ஆதரவு இன்றி இந்த முயற்சிகள் வெற்றி பெறாது. சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளுக்கென பாடத்திட்டம் பள்ளிகளில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்' என்று பேசினார். 

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார நிகழ்ச்சியில் புதன்கிழமை நடந்த இந்தப் பேரணியில் காவல்துறையினரின் 25 இருசக்கர வாகனங்கள், 10 கார்கள், 100 இரு சக்கர வாகனங்கள், 100 என்சிசி மாணவர்கள், மற்றும் மற்றும் 700 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT