இந்தியா

கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை

16th Oct 2019 11:13 AM

ADVERTISEMENT


சென்னை: நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் இன்று வருமான வரித்துறை அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறது.

அதே சமயம், கல்கி ஆசிரமத்துக்குச் சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், கோவர்த்தனபுரத்தில் உள்ள கல்கியின் மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் இன்று சோதனை நடைபெற்று வருகிறது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT