இந்தியா

ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

16th Oct 2019 10:51 AM

ADVERTISEMENT

 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் சட்டவிரோத பணப்பரிவா்த்தனை தொடா்பான வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீது அனுமதி வழங்கி தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (அக்.15) தீா்ப்பு வழங்கியது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ-யால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

முன்னதாக, அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் கார்த்தி சிதம்பரம் மற்றும் நளினி சிதம்பரம் திகார் சிறைக்கு வருகை தந்தனர்.

Tags : P Chidambaram
ADVERTISEMENT
ADVERTISEMENT