இந்தியா

48,000 போக்குவரத்து ஊழியர்கள் நீக்கம்: நீதிமன்றத்தை நாடுவோம் என ஊழியர்கள் தகவல்

7th Oct 2019 10:12 PM

ADVERTISEMENT


48,000 போக்குவரத்து ஊழியர்களை நீக்கி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம் என ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு தெரிவித்துள்ளது.  

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (ஆா்டிசி) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பது, ஓட்டுநா்களுக்கும் நடத்துநா்களுக்கும் பணிப் பாதுகாப்பு, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்துவது, டீசல் மீதான வரிகளை அகற்றுவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெலங்கானா அரசு சனிக்கிழமை மாலை 6 மணி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் சந்திரசேகர ராவ், விழாக் காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஏற்கனவே போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் மேலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

ADVERTISEMENT

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 48 ஆயிரம் ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வதாகவும் அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் அஷ்வதாமா ரெட்டி கூறுகையில், 

"48,000 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாக சந்திரசேகர ராவ் தெரிவிக்கிறார். அவர் உத்தரவுகளைப் பிறப்பிக்கட்டும். அனைத்து ஊழியர்களும் உத்தரவுகளைப் பெற்று, நீதிமன்றத்தில் அதை எதிர்ப்பதற்குத் தயாராக இருக்கிறார்கள். டிஎஸ்ஆர்டிசியில் புதிய ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற முதல்வரின் கருத்து அகந்தையின் வெளிப்பாடு. 

ஒட்டுமொத்தமாக இத்தனை ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. இதுவரை நாங்கள் ஆர்டிசியின் பாதுகாப்புக்காகப் போராடி வந்தோம். ஆனால், தற்போது ஜனநாயகத்தைப் பாதுகாக்க போராட வேண்டிய தேவை உள்ளது. 

ஆர்டிசியைப் பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், பொதுப் பயன்பாடுகளை அரசு தனியார்மயமாக்க முயற்சிக்கிறது. ஊழியர்களும், மக்களும் அரசின் முயற்சிகளை எதிர்ப்பார்கள்" என்றார்.

Tags : TSRTC employees dare KCR to issue sack orders
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT