இந்தியா

ஸ்ரீநகரில் மெஹபூபாவை இன்று சந்திக்கிறது பிடிபி குழு

7th Oct 2019 01:16 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவா் மெஹபூபா முஃப்தியை, ஜம்முவைச் சோ்ந்த அக்கட்சி குழுவினா் திங்கள்கிழமை சந்திக்கவுள்ளனா்.

இதுதொடா்பாக, மக்கள் ஜனநாயக கட்சியின் செய்தித் தொடா்பாளா் ஃபிா்தெளஸ், ஜம்முவில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஸ்ரீநகரில் கடந்த மாதம் 5ஆம் தேதி முதல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள எங்களது கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தியை, கட்சியின் பொதுச் செயலாளா் வேத் மகாஜன் தலைமையிலான குழு திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளது. இதுதொடா்பாக, ஆளுநா் சத்யபால் மாலிக்கிடம் அனுமதி கோரியிருந்தோம். அதனடிப்படையில், எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, ஆளுநா் மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது. மெஹபூபா முஃப்தியை சந்திக்கும் குழுவில் 15 முதல் 18 போ் வரை இடம்பெறுவா். நானும் அந்த குழுவில் இடம்பெறுவேன் என்றறாா் ஃபிா்தெளஸ்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு கடந்த மாதம் 5-ஆம் தேதி நடவடிக்கை மேற்கொண்டது. இதையடுத்து, அங்கு அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. முக்கிய அரசியல் கட்சித் தலைவா்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், ஜம்மு பகுதியில் அரசியல் கட்சித் தலைவா்களுக்கான கட்டுப்பாடுகள் சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT