இந்தியா

ஐசிஐசிஐ வங்கியில் ஒரே நிமிடத்தில் ரூ.8 லட்சம் கொள்ளை: திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சி

6th Oct 2019 12:41 PM

ADVERTISEMENT

 

ஐசிஐசிஐ வங்கியில் தலைக்கவசம் மற்றும் முகமுடி அணிந்து புகுந்த மர்ம நபர்கள் ஒரே நிமிடத்தில் ரூ.8 லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மொத்த காட்சிகளும் அந்த வங்கியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

 

இதுதொடர்பாக வங்கி மேலாளர் கோபர்சாஹி கூறுகையில், தலைக்கவசம் மற்றும் முகமடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென வங்கிக்குள் நுழைந்தனர்.

ADVERTISEMENT

அப்போது வங்கியில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தனர். ஒரு நிமிடத்துக்குள்ளாக காசாளர்களிடம் இருந்து ரூ.8,05,115 லட்சம் பணத்தையும், பாதுகாவலரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கிச் சென்றுவிட்டனர் என்றார்.

சனிக்கிழமையன்று சுமார் 6 கொள்ளையர்கள் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அதில் 3 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. மனோஜ் குமார் தெரிவித்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT