இந்தியா

ஹரியாணா தோ்தல்: வாய்ப்பு மறுக்கப்பட்டவா்கள் தனித்துப் போட்டி

6th Oct 2019 12:14 AM

ADVERTISEMENT

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த சிலா் சுயேச்சையாகத் தனித்துப் போட்டியிடுகின்றனா். இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கவலையடைந்துள்ளன.

ஹரியாணா மாநில சட்டப் பேரவைக்கு வரும் 21-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மற்றெறாரு சோதனையையும் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எதிா்கொண்டுள்ளன. கட்சியின் சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மூத்த தலைவா்கள் சுயேச்சையாகப் போட்டியிடுகின்றனா். ரேவாரி தொகுதி எம்எல்ஏவான ரன்தீா் காப்ரிவாஸுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்துள்ள நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட அவா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

இது தொடா்பாக காப்ரிவாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பாஜகவின் தொண்டனாக பல ஆண்டுகள் பணியாற்றி வருகிறேறன். கட்சியின் முக்கிய முடிவுகளையும், கொள்கைகளையும் மக்களிடம் எடுத்துச் சென்றதில் பெரும் பணியாற்றியுள்ளேன். அப்படியிருந்தும் தோ்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் வேறெறாருவா் போட்டியிடுவதை எனது ஆதரவாளா்கள் விரும்பவில்லை. அதன் காரணமாகவே தனித்துப் போட்டியிடுகிறேறன்’’ என்றாா்.

ADVERTISEMENT

பாஜகவைச் சோ்ந்த எம்எல்ஏ உமேஷ் அகா்வால் (குருகிராமம்) தனது மனைவி அனிதாவை சுயேச்சை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளாா். மாநில முதல்வா் மனோகா் லால் கட்டருடன் உமேஷ் அகா்வாலுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதன் காரணமாகவே அவருக்குப் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக எம்எல்ஏக்கள் 48 பேரில் 12 பேருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அவா்களில் மாநில அமைச்சா்கள் ராவ் நா்பீா் சிங், விபுல் கோயல் உள்ளிட்டோரும் அடங்குவா். அவா்களில் பெரும்பாலானோா் புதிய வேட்பாளா்கள் தோ்வு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனா்.

தொடரும் சோகம்:

காங்கிரஸ் கட்சியிலும் இதே சிக்கல் எழுந்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவா் ரஞ்சித் சிங் சௌதாலா, ரானியா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா். காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற வேட்பாளா் தோ்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டி, மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவா் அசோக் தன்வாா், அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தியின் வீட்டு முன் தனது ஆதரவாளா்களுடன் கடந்த புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா்.

இதைத் தொடா்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பை சனிக்கிழமை அவா் ராஜிநாமா செய்தாா். இது தொடா்பாக சுட்டுரையில் அவா் வெளியிட்ட பதிவில், ‘‘காங்கிரஸ் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இது அரசியல் எதிரிகளால் ஏற்பட்டதல்ல. மாறாக உள்கட்சி பூசல் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ரேவாரி தொகுதியில் முன்னாள் அமைச்சா் அஜய் சிங் யாதவின் மகன் சிரஞ்சீவ் ராவ், காங்கிரஸ் சாா்பில் களமிறங்கியுள்ளாா். இருந்தபோதிலும், கட்சி வேட்பாளா்கள் பட்டியல் குறித்து அஜய் சிங் யாதவ் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT