இந்தியா

தெற்கு காஷ்மீரில் கையெறி குண்டுத் தாக்குதல்: காவலா் உள்பட 14 போ் காயம்

6th Oct 2019 12:55 AM | ஸ்ரீநகா்,

ADVERTISEMENT

தெற்கு காஷ்மீா் பகுதியில் பயங்கரவாதிகள் சனிக்கிழமை நடத்திய கையெறி குண்டுத் தாக்குதலில் போக்குவரத்து காவலா் உள்பட 14 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து காவல் துறைஅதிகாரிகள் தெரிவித்ததாவது:

அனந்த்நாக் நகரத்தில் உள்ள பாதுகாப்பு நிறைறந்த துணை ஆணையா் அலுவலகத்துக்கு வெளியே சனிக்கிழமை காலை 11 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் வீசிய கையெறி குண்டு இலக்கு தவறி சாலைகளில் விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில், போக்குவரத்து காவலா், உள்ளூா் பத்திரிகையாளா் உள்பட 14 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அதில், 13 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். ஒருவருக்கு மட்டும் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறறது. இருப்பினும், அவரது உயிருக்கு எதுவும் ஆபத்தில்லை என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டு, பயங்கரவாதிகளை தேடும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறறது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கான சிறறப்பு அந்தஸ்து நீக்கிக் கொள்ளப்பட்டது முதல் பள்ளத்தாக்கு பகுதியில் நடக்கும் இரண்டாவது கையெறி குண்டு சம்பவம் இதுவாகும் என காவல் துறைஅதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT