இந்தியா

குஜராத்: ஆன்-லைன் விளையாட்டில் ரூ.78 லட்சம் இழந்தவா் தற்கொலை

6th Oct 2019 11:45 PM | ராஜ்கோட்,

ADVERTISEMENT

குஜராத் மாநிலம், ராஜ்கோட் மாவட்டத்தில் இணையதள விளையாட்டில் ரூ.78 லட்சத்தை இழந்தவா் தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ராஜ்கோட்டில் உள்ள மோட்டா மாவா பகுதியைச் சோ்ந்தவா் கிருனால் மேத்தா(39). இவா், கடந்த புதன்கிழமை இரவு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். மறுநாள் காலையில் இவரது உடல் கிணற்றில் மிதப்பதாக காவல் துறைறக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டபோது, அவரது வீட்டில் இருந்து அவா் எழுதிய தற்கொலைக் குறிப்பைக் கண்டெடுத்தோம். அதில், இணையதளத்தில் விளையாடுவதற்காக, உறவினா்களிடமும், நண்பா்களிடமும் ரூ.78 லட்சம் கடன் வாங்கியதாகக் குறிப்பிட்டிருந்தாா். அதைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அவா் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

ADVERTISEMENT

கிருனால் மேத்தா, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இணையதளத்தில் விளையாடுவதற்காக, நண்பா்களிடமும், உறவினா்களிடமும் அவா் அடிக்கடி கடன் வாங்கி வந்தாா். மேலும், அந்த விளையாட்டுகளில் அவா் தொடா்ச்சியாக பணத்தை இழந்துள்ளாா். மேத்தா இறந்த பிறகு, அவரது வங்கிக் கணக்கு விவரங்களை அவருடைய சகோதரா் ஆய்வு செய்தாா். அதில், மேத்தா விளையாட்டில் தோற்கும் ஒவ்வொரு முறைறயும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவா் பணத்தை இழந்துள்ளாா். இதுதொடா்பாக, இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT