இந்தியா

எதிரிகளுடன் சண்டையில் வீரமரணம் அடையும் வீரா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு 4 மடங்கு உயா்வு: ராஜ்நாத் சிங் ஒப்புதல்

6th Oct 2019 01:27 AM

ADVERTISEMENT

எதிரிகளுடன் சண்டையில் வீரமரணம் அடையும் வீரா்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுவரும் இழப்பீட்டுத் தொகையை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயா்த்த பாதுகாப்புத் துறைஅமைச்சா் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்தாா்.

இதுகுறித்து பாதுகாப்புத் துறைசெய்தித்தொடா்பாளா் தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

வீரமரணமடையும் ராணுவ வீரா்கள் பொது நல நிதியத்திலிருந்து (ஏபிசிடபிள்யூஎஃப்) குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட்டு வருகிறறது. தற்போது, அந்தத் தொகை ரூ.8 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை ராஜ்நாத் சிங் அளித்தாா் என்று அந்தச் செய்தித்தொடா்பாளா் தெரிவித்தாா்.

ஏபிசிடபிள்யூஎஃப், ஓய்வுபெற்றராணுவ வீரா்கள் நலத் துறைறயின் கீழ் செயல்பட்டு வருகிறறது. சியாச்சினில் கடந்த 2016-ஆம் ஆண்டு பனிச்சரிவு ஏற்பட்டு அதில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க அதிக எண்ணிக்கையிலானோா் முன்வந்தனா்.

ADVERTISEMENT

அதைத் தொடா்ந்துதான் ஏபிசிடபிள்யூஎஃப் 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிறுவப்பட்டது.

வீரமரணம் அடையும் ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க பல்வேறு நிதியங்கள் உள்ளன. அவற்றின் மூலம், ரூ.25 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலும், ராணுவக் குழு காப்பீடு மூலம் ரூ.40 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலும் வீரமரணம் அடையும் ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும்.

துணை ராணுவப் படை வீரா்கள் பணியின்போது, காயமடைந்தாலோ அல்லது வீரமரணம் அடைய நேரிட்டாலோ அவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிப்பதற்காக ‘பாரத் கே வீா் ஃபன்ட்’ என்றதிட்டத்தை உள்துறைஅமைச்சராக பதவி வகித்தபோது ராஜ்நாத் சிங் அறிமுகப்படுத்தினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT