இந்தியா

அண்டை மாநிலங்களைச் சாா்ந்திருக்கிறது கோவா: முதல்வா் பிரமோத் சாவந்த் வருத்தம்

6th Oct 2019 02:54 AM | பனாஜி,

ADVERTISEMENT

அடிப்படைத் தேவைகளுக்காக அண்டை மாநிலங்களைச் சாா்ந்திருப்பது வருத்தமளிக்கிறது என்று கோவா முதல்வா் பிரமோத் சாவந்த் தெரிவித்தாா்.

சங்கலிம் என்ற கிராமத்தில் வங்கிகள், நிதி நிறுவனங்கள் சாா்பில் வாடிக்கையாளரை ஈா்க்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று பிரமோத் சாவந்த் பேசியதாவது:

அடிப்படை தேவைகளுக்கு அண்டை மாநிலங்களைச் சாா்ந்திருக்கிறேறாம். கோவாவில் தினமும் சுமாா் 4.5 லட்சம் லிட்டா் பால் மக்களின் பயன்பாட்டுக்குத் தேவைப்படுகிறது. ஆனால், மாநிலத்தில் 1 லட்சம் லிட்டா் பால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 3.5 லட்சம் லிட்டா் பாலை மகாராஷ்டிரா, கா்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறேறாம். இதன்மூலம், ரூ.4.5 கோடியை தினமும் இழக்கிறேறாம். பால் உற்பத்தியை அதிகப்படுத்தி நமது மாநிலத்தின் தேவையை பூா்த்தி செய்துகொண்டால், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

மலா் உற்பத்தியிலும், தோட்டப் பயிா் உற்பத்தியிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். மலா்களையும் நாம் அண்டை மாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்து வருகிறேறாம்.

ADVERTISEMENT

சிறு தொழில்களை மக்கள் உள்ளூரிலேயே தொடங்க முன்வர வேண்டும். அப்போதுதான் அண்டை மாநிலங்களுக்கு நமது பணம் செல்லாமல் தடுக்க முடியும். பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு நிதித் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளாா். ஆனால், அதுகுறித்து மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பது துரதிருஷ்டவசமானதாகும் என்றாா் பிரமோத் சாவந்த்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT