இந்தியா

பெட்ரோல் இல்லாமல் பாதியில் நின்ற ஆம்புலன்ஸ்: கர்ப்பிணி உயிரிழந்த சோகம்!

5th Oct 2019 10:19 PM

ADVERTISEMENT


ஒடிஸாவில் கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றதால், அந்தப் பெண் பாதி வழியிலேயே உயிரிழந்தார். 

ஒடிஸாவில் ஹண்டா கிராமத்தில் வசிப்பவர் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. வெள்ளிக்கிழமை இரவு துளசி முண்டாவுக்கு பிரசவ வலி எடுக்க, அவர் பங்கிரிபோஷி சமுதாய சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். இருந்தபோதிலும், மருத்துவர்கள் அவரை பண்டித ரகுநாத் முர்மு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (பிஆர்எம்எம்சிஹெச்) கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

இதனடிப்படையில், துளசி முண்டா ஆம்புலன்ஸ் மூலம் பிஆர்எம்எம்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். பரிபாடா எனும் நகரத்துக்கு அருகே சென்றபோது, ஆம்புலன்ஸ் வாகனம் எரிபொருள் இல்லாமல் பாதியில் நின்றது. இதனால், அடுத்த ஆம்புலன்ஸ் வருவதற்கு 45 நிமிடம் ஆனது. இந்த 45 நிமிடத்தில் கர்ப்பிணிப் பெண்ணான துளசி முண்டா உயிரிழந்தார். 

இதுகுறித்து, உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் சித்தரஞ்சன் முண்டா தெரிவிக்கையில், "எரிபொருள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகனம் நடுவழியில் நின்றது. அடுத்த ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது. நாங்கள் மருத்துவமனைக்கு வரும்போது, எனது மனைவி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்" என்றார். 

ADVERTISEMENT

இதுகுறித்து, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் குமார் மோஹபத்ரா கூறுகையில், "இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் குறித்து நான் இன்று கேள்விபட்டேன். மருத்துவமனைக்கு வரும் வழியில், எண்ணெய் குழாயில் இருந்து எரிபொருள் கசிந்ததாக ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் தெரிவிக்கிறார். இருந்தபோதிலும் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT